இன்றைய காலங்களில், ஸ்டமக் அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்படுகிறது. குறிப்பாக, வேலைக்கு செல்பவர்களுக்கு எளிதாக இது வந்து விடுகிறது.

இது அபாத்தான, அல்லது அதிக பாதிக்ப்பை உண்டாக்கும் நோய் இல்லை என்று நினைப்பது தவறு, இது தொடர்ந்து ஏற்பட்டால் குடலில் கேன்சர் மற்றும் கட்டி, குடலின் உட்சுவர் உடைதல் மற்று உள் ரத்தப்போக்கு போன்ற மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்பு உள்ளது.

அல்சர் என்னும் இந்த குடல் புண்ணை தவிற்பதற்கான சில வழிமுறைகள் இதோ:

முதல் தற்காப்பு நேரம் தவராமல் உணவு உட்கொள்வது. நாம் உண்ணும் உணவிற்கு இடையில் சரியான நேர கோட்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் 4 முதல் மூன்று வேளை தவராமல் உணவு உட்கொள்வதுடன் சரியாக 15 அல்லது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை நீர் அருந்த வேண்டும். நீர் குடலிலுள்ள அமிலத்தை சமன் செய்ய உதவும்.

ஆகையால் அடிக்கடி நீர் குடிப்பது மிகவும் நல்லது. புகைப்பழக்கத்தை முற்றிலும் தடுக்க இயலாவிடிலும், குறைத்தல் அவசியம். உணவில் அதிக அளவு காரம், ரசாயனங்களை தவிற்க்க வேண்டும்.

அவ்வப்போது நொருக்கு தீனிகள் அல்லது ஜங்க் ஃபுட் என்றழைக்கப்படும், எண்ணெய் பதார்த்தங்களை தவிர்த்து, அரோக்யமான பழங்கள் மற்றும் காய்கறிகளை அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும்.

இவையாவையும் செய்ய இயலாத போதும், முன்பு கூறியது போல சாதாரன தண்ணீரையே அடிக்கடி குடித்து வந்தால் கண்டிப்பாக அல்சர் ஏற்படும் வாய்பு குறையும் என்பது உறுதி.

ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது…….!

தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும் மிகவும் நல்லது…….!

தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது…….!

குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்…….!

மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்…….!