உடலுக்குப் பொருந்தும் உணவை மனம் போல் உண்ணாமல் அளவு அறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்டால், தனது உயிருக்கு நோய்களால் எந்தத் துன்பமும் வராது.ஆனால் சமீப பத்தாண்டுகளில் ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் மக்கள் உடல் பெருத்து அவதிப்படுகின்றனர். இதிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்வதால் உடல் அழகு மட்டுமல்லாமல் ஆரோகியத்தோடும் வாழ முடியும்.

Plantain Stem

வாழைத்தண்டு:

அதிக நீர்ச்சத்து, நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச்சத்தும் உள்ளது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.

சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும். பெண்களின் மாவிடாய் கோளாறு- ரத்த அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது, சிறுநீரகத்தில் தோன்றும் கற்களைக் கரைக்கும்.

வாழைத் தண்டு காதுநோய், கருப்பை நோய்கள், ரத்தக் கோளாறுகள் ஆகியவற்றைக் குணமாக்கும். வாழைத்தண்டை உலர்த்திப் பொடி செய்து அத்துடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். வெட்டிய வாழைத்தண்டிலிருந்து வரும் நீரைத் தடவத் தேள், பூரான் ஆகியவற்றின் கடியினால் ஏற்படும் வலி குறையும்.

வாழைத் தண்டைச் சுட்டு, அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வû தீப்புண்கள், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். வாழைத் தண்டிற்குக் குடலில் சிக்கியிருக்கும் மயிர், நஞ்சு ஆகியவற்றை வெளிப்படுத்தும் குணமுண்டு.

வாழைப் பூவை வேகவைத்து பொரியல் செய்து உண்பதால் அஜீரணம் நீரழிவு நோய் நீங்கும். குளிர்ச்சியை உண்டாக்கும் வயிற்றுப் புழுக்களை ஒழிக்கும் பித்த நோய்களையும், இருமலையும் நீக்கும்.

வாழைப்பூச்சாற்றுடன் கடுக்காயைச் சேர்த்து அருந்த மூலநோய், ஆசனக்கடுப்பு நீங்கும். கைகால் எரிச்சல், வெள்ளைபடுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும். வாழைப்பூச்சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்தும் பருகலாம்.

அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம்.வாழையின் உள் தண்டை சிறுசிறு துண்டுகளாக்கி வேறினை நீக்கி சமைத்து உண்ண சிறுநீர் பாதைகளில் ஏற்படும் கல் அடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சீதபேதி தாகம் தணியும்.

வாழைத்தண்டு அதிக குளிர்ச்சி கொண்டது என்பதால் அதை உண்ணும் நாட்களில் தயிர், மோரை தவிர்க்கவும். வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.