வேப்பிலையை வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கினால் காய்ச்சல் குணமடையும்.

மிளகு மற்றும் சீரகம் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலேரியா காய்ச்சல் குணமாகும்.

கோரை கிழங்கை கழுவி சுத்தம் செய்து நீர்விட்டு காய்ச்சி குடித்து வந்தால் அனைத்து வகையான காய்ச்சலும் சரியாகும்.

நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டையாக செய்து தினமும் காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால் எலும்புக் காய்ச்சல் குணமடையும்.

Natural Health Tips

அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும் . பிறகு அதை இறுக்கி மூடி வைக்கவும்.மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு சாறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் தொடர்ந்து பத்து நாட்கள் இது போல் அன்னாசிப் பழத்தைத் தாயாரித்து குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்.

பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும்.

கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்