Jamun Fruit Cures Hemorrhoids(Piles)-(Tamil)

மூல நோயின் பாதிப்பா?

மூலத்தைஉள்மூலம், வெளிமூலம் என பொதுவாக இரண்டு வகையாக பிரிக்கலாம்.மூலத்திற்கு முதல் காரணம் மலச்சிக்கல். உண்ணும் உணவு முறையை மாற்றி அமைத்துக் கொண்டாலே மூலம் வராது.

மூல நோய் என்பது ஆசனவாயில் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் காணப்படும் சிறு இரத்தக் கட்டிகளாகும். ஒரே இடத்தில் உட்கார்ந்து மணிக்கணக்கில் வேலை செய்வதால் ஆசனவாயில் சூடு ஏற்படுகிறது.

Jamun Fruit Cures Hemorrhoids

அது வெளியேறமுடியாமல் ஆசனவாயின் உட்புறத்தை தாக்குகிறது. இதனால் மூலத்தில் சூடு ஏற்பட்டு மூல நோய் உண்டாகிறது.

உள்மூலம் இருப்பதற்கான அறிகுறிகள் :-

  உள்மூலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உடல் மெலிந்து உடல் வெளுத்து காணப்படுவர். பசியின்றி இருப்பார். மலத்துடன் இரத்தம் வெளியேறும்.சிலநேரங்களில் உடல் சூட்டினால் கூட இரத்தம் வெளியேற வாய்ப்புள்ளது.

மூலமானது ஆசனவாயின் உட்புறத்தில் தசைபோன்று வளர்ந்திருக்கும். மலம் வெளியேறும்போது மிகுந்த இறுக்கத்துடனும், வலியுடனும் காணப்படும். சில சமயங்களில் வயிற்று வலி ஏற்ப்படும்.

வெளிமூலத்தின் அறிகுறிகள் :

வெளிமூலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பசியின்றி, அமைதியின்றி மிகுந்த களைப்புடனும் சோகத்துடனும் காணப்படுவர். மூலம் வெளியே தள்ளிக் காணும்.

அடிவயிற்றில் இரைச்சல், தொப்புளைச் சுற்றி வலி, மலம் கழிக்கும் போது இரத்தம் வெளியேறுதல் போன்றவை இருந்தால் நிச்சயமாக மூலம்தான்.

தீர்வு தரும் நாவல்பழம்:

நமது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது பழங்கள் தான் என்று சொன்னால் அது மிகையல்ல.நாவல் மரத்தின் பட்டை, பழம், விதை, இலை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது ஆகும்.

இதில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது, மேலும் சோடியம், தாமிரம் ஆகியவை கணிசமான அளவில் உள்ளது.

Jamun Fruit Cures Hemorrhoids1

நாவல் பழத்தின் மகத்துவங்கள்

நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைந்துவிடும், மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்தி விடலாம்.

மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் கருப்பை பாதிப்புகள் சரியாகும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். மேலும் சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும்.

நாவல் பழத்தினை அளவாக சாப்பிட்டு வந்தால், தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, மாரடைப்பு வருவதைக் குறைக்கும்.

வயிற்று போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *