மாட்டுப் பொங்கல்:

ஏர்பூட்டி வயலை உழுகிறான் விவசாயி. எருது மிரண்டால் அதை பிடிப்பது எப்படி என தெரியவேண்டாமா? அதைக்கற்றுக்கொடுக்கும் பயிற்சிதான் ஜல்லிக்கட்டு. மாட்டை எப்படி அன்பாக நடத்துவதுன்னு இம்மாதிரி மெத்தப்படித்த ஞானிகளை விட அதிகமாக அறிந்தவர்கள் நம் விவசாயிகள்.

அவர்கள் தான் இந்தியாவில் உள்ள அனைத்துமாடுகளையும் உனவளித்து, காப்பாற்றி, பிரசவம் பார்த்து, மாட்டுத்தொழுவத்தில் சாணியை அள்ளி அவற்றை பராமரித்து வருகிறார்கள்.

Cow Pongal History

அவர்களுக்கு மாடுகளை எப்படி நடத்தணும்னு ஒற்றைமாட்டை ஆயுளில் தொட்டிராதவர்கள் உபதேசம் செய்ய ஆரம்பித்திருப்பதுதான் காலக்கொடுமை  மாடுகளுக்கும், விவசாயிகளுக்கும் உள்ள உறவு கோர்ட்டுக்குகளுக்கும், மிருகவதை சங்கங்களுக்கும் பல்லாயிரம் ஆண்டு முற்பட்டது.

ஆனால் இவர்கள் எல்லாரும் கிராமத்துக்கு மக்களுக்கு கலாசாரப்பாடம் எடுப்பது நகைப்புக்கிடமானது. பதிவில் சொல்லபட்டிருப்பது போல் இவர்கள் எல்லாம் ஒரு மாட்டை ஆயுளில் கையால் தொட்டு உழுது அல்லது பால்கறந்து அல்லது வண்டியில் கட்டி ஓட்டியிருந்தால் இதை எல்லாம் கொடுமை, டார்ச்சர் என சொல்லிகொண்டிருக்க மாட்டார்கள்.

மாட்டை அடிக்காமல், அதட்டாமல் அதற்கு எந்த வேலையையும் கற்றுக்கொடுக்க முடியாது, வேலை வாங்க முடியாது. சந்தேகம் இருந்தால் மிருகவதை சங்கத்தினரை வீட்டுக்கு ஒரு மாடு வளர்த்து அதை அடிக்காமல் எதாவது ஒரு வேலை வாங்க சொல்லுங்கள் பார்க்கலாம்.

“நாங்கள் ஏன் மாடு வளர்த்தணும்?” என கேட்டு எஸ்கேப் ஆகவேண்டாம். நீங்கள் வலர்க்கவில்லை என்றாலும் நீங்கள் உண்ணும் உணவு கிராமங்களில் மாடுவளர்ப்பவர்களிடம் இருந்து தான் பாரவண்டி, ஏர் உழவு மூலம் வருகிறது. நீங்கள் நினைப்பது போல எல்லா விவ்சாயிகளும் டிராக்டர், லாரிக்கு மாறவில்லை.

இந்தியாவில் நிறைய ஏழைவிவசாயிகள் மாடு, காளைகளை வைத்துத்தான் பிழைப்பு நடத்துகிறார்கள். அவர்களால் தான் பலகோடி மக்கள் பசியாறுகிறார்கள். டிராக்டரை கண்டுபிடித்து ஐம்பதாண்டுகள் தான் ஆகின்றன. அதற்கு முன் இத்தனை ஆயிரம் வருடங்கலாக காளையை வைத்துத்தான் உழவு நடந்தது.

டிராக்டர் வரும் என எருதை பூட்டி உழாமல் சும்மா உட்கார்ந்து இருந்தால் மனித இனமே பூன்டோடு அற்றுபோயிருக்கும் காளைகளை வண்டியில் பூட்ட பயிற்சி வேண்டும், காளைகளை ஏரில் பூட்ட பயிற்சி வேண்டும், எடுத்த எடுப்பில் அவை இதை எல்லாம் கற்றுக்கொள்லாது. மக்களும் கற்றுக்கொள்ல மாட்டார்கள்.

இதற்காக பயிற்சி கொடுக்கதான் ஜல்லிகட்டு மாதிரி விழாக்கள் உருவாகின. மாட்டுவாலைப்பிடித்து முறுக்குவது, கண்ணில் மணலை போடுவது எல்லாம் இப்போது கிடையாது, கடுமையாக கிராமத்தினரே அதை எல்லாம் தடுத்து முறைப்படுத்திவருகிறார்கள்.

ஒலிம்பிக்ஸிலேயே ஊக்கமருந்து மாதிரி குறுக்குவழிகளை சிலர் கடைபிடிப்பதால் நீங்கள் என்ன ஒலிம்பிக்ஸையே தடை செய்துவிட்டீர்களா? அதை எல்லாம் களைந்து போட்டிகளை நியாயமாக தானே நடத்த முயல்கிறோம்? அப்புறம் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் அந்த விதி பொருந்தாதா?

நம் மண்ணின் தொன்மையான மரபுகளை எல்லாம் இப்படி ஒவ்வொன்ராக இழந்துகொன்டிருந்தால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. பெயர் மட்டும்தான் தமிழ்நாடு என இருக்கும், உண்ணும் உனவு பீட்சாவாகவும், பேசும் மொழி ஆங்கிலமாகவும் கலாசாரம் ஆங்கிலேயனைப்பார்த்து காப்பியடித்த கலாசாரமாகவும் ஆகிவிடும்.