Benefits of Oil Bath(Tamil)

எண்ணைக்குளியல் செய்வதால் பலன்கள்..!!

நம் முன்னோர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நல்லெண்ணை உடல் முழுக்க பிரட்டி சிறிது நேரம் (உடம்பில் சுவறும் வரை) இருந்து தோய்வது வழக்கமாக இருந்தது எங்கள் எல்லோருக்கும் தெரியும். காரணம் கேட்டால் உடம்புச் சூடு தணிய என்று கூறுவார்கள்.

எண்ணைக் குளியல் காலை 6 .30 க்குள் தொடங்கி விட வேண்டும். இள வென்நீரில் தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். சீயக்காய் அல்லது நலுங்குமா பயன் படுத்தலாம். எளிமையான உணவுகள் உண்ணவேண்டும். எண்ணைக் குளியல் செய்த அன்று பாலுறவு கூடாது. பகலுறக்கம் கூடாது.

oil bath

கடுமையான வெய்யலில் வேலை செய்யகூடாது. குளிர்ந்த உணவுகள் கண்டிப்பாக கூடாது. எண்ணெய் தேய்ந்துக் குளிப்பதால் நம்மைச் சுற்றிலும் ஒரு புகை வளையம் உருவாகின்றது என்பதை இந்த ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவ்வளையம் இருப்பதால் கோள் களிலிருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய முடியாமல் போகின்றது.

நோன்பிருக்கும் நாட்களில் உடல் மற்றும் மனது தூய்மை மிக முக்கியமானதால் கிரகங்களினின்றும் நட்சத்திரங்களினின்றும் பூமிக்கு வரும் காந்த அலைகள் உடலுக்கு மிகவும் அவசியம்.

இவ்வலைகள் உடலுக்குள் நுழைய எண்ணெய் தடையாக இருப்பதால் தான் அந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை கை விடச்சொல்லியுள்ளார்கள் நம் முன்னோர்.

முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்ல. நான் சின்னவயதில் அப்போது பெரியவர்கள் நல்லெண்ணையுடன் வெள்ளைப்பூடு, வத்தல் போன்ற சில பொருட்களை சேர்த்து காய்ச்சி சற்று ஆறியவுடன் கொஞ்சம் வெது, வெதுப்புடன் உடலில் தேய்த்து சுட வைத்து குளிப்பது வழக்கமாக இருந்தது.

எண்ணைக்குளியலுக்கு வலு சேர்க்கும் ஸ்நானப்பொடி, நலம் பல பயக்கும் மூலிகைகளால் ஆனது, இயற்கை வனங்களில் விளைந்த சீயக்காய், குமிழம் பழம், செம்பருத்தி,நெல்லி,பயிறுமாவு,குப்பைமேனி,நூற்றாண்டு வேம்பு இலை இன்னும் சில இயற்கை மூலிகைகள் கொண்டு பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுவதுதான் ஸ்நானப்பொடி.

உடலில் தேய்த்த எண்ணைப்பிசுக்கை மட்டும் போக்குவதல்லஇந்த ஸ்நானப் பொடி அத்துடன் முகத்துக்கு பொலிவையும்,கண்களுக்கு குளிர்ச்சியையும் உடலுக்கு இதமளித்து ,வலுவையும் புத்துணர்வையும் ஊட்ட வல்லது.அப்படி எண்ணை தேய்த்து குளியல் செய்த பெரியவர்கள் வயாதான பிறகும் காது, கண் போன்ற உறுப்புகள் தெளிவாக வேலை செய்ததையும்,கால்கள் -கைகள் வாத, மூட்டு வலிகள் இல்லாமல் இயங்கியதையும் பார்த்து வியந்திருக்கிறேன்.

குறிப்பாக தலை முடி நரையின்றி வளர்ந்ததையும் கண்டிருக்கிறேன்.இவைகள் எண்ணைக்குளியலின் பயங்கள்தான் என்பதை இப்போதுதான் உணர்கிறேன்.

எண்ணைக்குளியல் அன்று மிளகு ரசத்துடன் சாப்பாடு கண்டிப்பாக இருக்கும். குளியலன்று தாம்பத்யம் வைக்க கூடாது என்று சொல்ல கேள்வி. அப்படி வைத்தவர்களுக்கு சுகஜன்னி என்ற காய்ச்சல் வருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். மாலையில் எண்ணை குளியல் ஆகவே ஆகாது. எண்ணைக்குளியல் செய்வதால் பலன்கள்.

உடற்சூடு சீராகும், அழகுகூடும், சருமம் மென்மைபெரும், ஐம்புலனும் நல்ல பலன் கிடைக்கும், தலை மயிர் நன்கு வளரும், நல்ல குரல் வளம் கிடைக்கும், எலும்புகள் பலப்படும்.

பெண்கள், ஆண்கள்,எண்ணெய் குளியல் நாள் அட்டவணை:

பெண்களும் எண்ணைக்குளிப்பும்:

ஞாயிறு குளித்தால் வடிவமும் அழகும் போய்விடும்.
திங்கள் குளித்தால் அதிகப் பொருள் சேரும்.
செவ்வாய் குளித்தால் துன்பம் வரும்
புதன் குளித்தால் மிக புத்தி வந்திடும்.
வியாழன் குளித்தால் உயரறிவு போய்விடும்.
வெள்ளி குளித்தால் செல்வம் மிகும்.
சனி குளித்தால் ஆயுள் அதிகமாகும்.

ஆண்களும் எண்ணெய் குளிப்பும்:

திங்கட் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதம் வரும்
செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முதுகு கண்ட மாலை நோய் வரும்.
வியாழக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் கால் குடைச்சல் வரும்.
வெள்ளிகிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முட வாதம் வரும்.

[ இதனை.” அறப்பளீசுர சதகம் ” கூறுகிறது.]

இனி எண்ணெய் தேய்த்து குளிக்க முயலும் – அல்லது நினைக்கும் அன்பர்கள் சனி புதன் நாட்களில் குளிக்கவும் !

நம் முன்னோர்கள் சனியையும், புதனையும் ஏன் தேர்தெடுத்தார்கள்?பதான் அறிவினையும், சனி ஆயுளையும் உடல் நலத்தினையும் தருவதாக உயர்வாக நினைத்தார்கள் – மதித்தார்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. வெது வெதுப்பான சுடு நீரில் தான் குளிக்க வேண்டும்.

One Comment

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *