உடலில் 80 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளது. எனவே தான் இவ்வுலகில் உணவு இல்லாவிட்டாலும் வாழ முடியும், ஆனால் தண்ணீரின்றி வாழ முடியாது. மேலும் தண்ணீர் உடலில் போதிய அளவில் இருந்தால், உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். பலர் தண்ணீரை அதிகம் குடிக்காமல் இருக்கின்றனர்.
இதற்காக அவர்களுக்கு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி நன்கு தெரியவில்லை என்று அர்த்தம் இல்லை. அதிகமான வேலைப் பளுவினால், தண்ணீர் குடிப்பதற்கு கூட நேரமில்லை என்று தான் சொல்ல வேணடும். உண்மையில் தண்ணீர் குடிப்பதால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கலாம்.
தலை முதல் கால் வரை ஒவ்வொரு செல்லும் தண்ணீரின் தேவையை உணர்ந்துள்ளன. மனித மூளையின் செயல்பாட்டிற்கு 90 சதவிகிதம் தண்ணீர் தேவையுள்ளது. எனவே உடலில் நீர்ச்சத்து குறைய குறைய மூளையின் செயல்பாடு குறையும். இதனையடுத்து தலைவலி உள்ளிட்ட நோய்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும். எனவே தண்ணீரை நாம் நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.
அதனால் தான் மருத்துவர்கள் கூட தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். மேலும் மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அது நிச்சயம் போதாது. ஏனெனில் நாம் வெளியே வேலைக்கு செல்வது, பயணம் மேற்கொள்வது போன்றவற்றை செய்வதால், 8 டம்ளர் தண்ணீர் என்பது குறைவு தான்.
ஆகவே குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால், உடலானது நன்கு செயல்படும். அதிலும் கோடைகாலம் என்றால், குறைந்தது 4-5 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இப்போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிட்டுள்ளோம். அதை படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை தவறாமல் தொடருங்கள்.
கலையில் கண்விழித்ததும் பல் துலக்கும் முன்பே 4 டம்ளர் தண்ணீர் அருந்தவேண்டும். பின்னர் பல் துலக்கி வாய் சுத்தம் செய்த பின்னர் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவுமே உட்கொள்ளக் கூடாது. 45 நிமிடங்களுக்குப் பின் வழக்கமான உணவை உட்கொள்ளலாம்.
தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் …!
-
விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்.
-
உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.
-
உடலின் வெப்பத்தை சீராக வைப்பதற்கு, தினமும் போதிய அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும். இல்லையெனில் உடலில் அதிகப்படியான வெப்பம் ஏற்பட்டு, ஆபத்தை விளைவிக்கும்.
-
உடலில் மெட்டபாலிசம் எனப்படும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது.
-
முகத்தில் முகப்பருக்கள், பிம்பிள் போன்றவை அதிகப்படியான அழுக்குகள் மற்றும் எண்ணெய் காரணமாகத் தான் ஏற்படுகிறது. எனவே இத்தகைய அழுக்குகளை வெளியேற்றுவதற்கும், பருக்கள் வராமல் இருக்கவும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
-
குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு உதவும்.
-
மூளையில் 90 சதவீத தண்ணீர் உள்ளது. ஆனால் போதிய தண்ணீர் உடலில் இல்லாவிட்டால், தலைவலி, சோர்வு போன்றவை அதிகம் ஏற்படும். அதிலும் 24 மணிநேரத்திற்கு மேலாக உடல் வறட்சி இருந்தால், இது மிகவும் மோசமான நிலையை உண்டாக்கிவிடும்.
-
தண்ணீர் வயிற்றை நிரப்புவதோடு, மெட்டபாலிசத்தின் அளவையும் அதிகரிப்பதால், அது உடல் எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும்.
-
தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மாரடைப்பிலிருந்து தப்பலாம்.
-
அனைவரது உடலிலுமே ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கில் கழிவுகள் சேரும். ஏனெனில் மாசுக்கள், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றால் உடலில் கழிவுகள் அதிகம் சேரும். எனவே இத்தகையவற்றை உடலில் இருந்து முறையாக வெளியேற்றுவதற்கு தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்.
-
நிறைய பேர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், அப்போது அதிகப்படியான தண்ணீர் குடித்தால், அவை சரியாகிவிடும். ஏனெனில் தண்ணீர் குடலியக்கத்தை சீராக வைக்கும்.
Related
Related posts
Recent Posts
- How to Protect Your Digital Profile
- How to be Successful As a New Marketing Manager
- Jio Fiber in Tamilnadu
- Uses of Sulfuric Acid – TANFAC Industries Limited
- How to Train your brain
- Why It’s Important To Know Your Strengths And Weaknesses
- Foods that can Help You to Fight Cancer
- SEO Strategies for your Content
- How to take a perfect oil bath
- SAP TCode to Release Credit Block