Very Easy Tips To Remove Belly

தொப்பையை குறைக்க எளிதான வழிகள்:

வாக்கிங் போறதுக்கு டைம் இல்லை. ஜிம்முக்கு போயி எக்ஸர்சைஸ் பண்றதுக்கு டைம் இல்லை. நாக்கையும் அடக்க முடியறதில்லை. ஆனா தொப்பை குறையணும்ன்ற ஆசை மட்டும் குறையறதேயில்லை. நோகாம நோன்பு கும்பிடனும்  என்ன பண்ணலாம்?…

சிக்ஸ் பேக் வேணும்னாதான் பல டஃபான எக்ஸர்சைஸ் எல்லாம் பண்ணனும். மத்தபடி வெறுமனே தொப்பையை மட்டும் குறைக்கிறதுக்கும், கட்டுபாடா வச்சிக்கிறதுக்கும்னா இருக்கவே இருக்கு  எளிதான  வழிகள்.

டெய்லி காலையில எழுந்து பல்ல வெளக்குனதும் மொத வேலையா ஒரு டம்ளர் மிதமான வெந்நீருல அரை எழுமிச்சம்பழத்தை பிழிஞ்சி உப்பு, சர்க்கரை எதுவும் சேர்க்காம குடிச்சிருங்க.

belly reduction

மிதமான சூட்டுல அரைலிட்டர் அளவு வரைக்கும் வெறும் தண்ணீரையும் குடிங்க. இதுல இருந்து குறைஞ்சது அரைமணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடாதீங்க. (அப்புறம் பால் சேர்க்காத பிளாக் டீ, கிரீன் டீ இப்படி ஏதாவது சாப்பிட்டு பழகிக்கிட்டீங்கன்னா ரொம்ப நல்லது. முடிஞ்சவரைக்கும் பாலை அவாய்டு பண்ணுங்க)

கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், குளிக்க போறதுக்கு முன்னாடி ஒரேயொரு சின்ன ஈஸியான எக்ஸர்சைஸ்…

ரெண்டு காலையும் சேத்துவச்சு அட்டேன்ஷன்ல நிக்கிற மாதிரி நின்னுக்கோங்க. அப்புறம் ரெண்டு கையையும் மடக்காம நேரா தலைக்குமேலே ஸ்ட்ரைட்டா தூக்குங்க. இப்போ காலோட முட்டி மடங்காம அப்படியே உடம்பையும், தலைக்கு மேலே தூக்குன கையையும் முன்பக்கமாக மடக்கி குனிஞ்சி உங்க காலோட பெருவிரலை தொடுங்க.

ஒருசில விநாடிகளுக்கு அப்புறமா அப்படியே கையை தலைக்கு மேல நீட்டுனமாதிரியே நேரா நிமிருங்க. (ஒரு நாளைக்கு நூறு தடவை இப்படி செய்யனும். காலையில ஐம்பது, சாயந்திரம் ஐம்பது… இப்பிடி பிரிச்சிகூட செய்யலாம். காலோட முட்டி மடங்காம செய்யறதுதான் இதுல ரொம்ப ரொம்ப முக்கியமான சமாச்சாரம்…)

காலை உணவா நீங்க சாப்பிட வேண்டியது ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி… இல்லாட்டி ஒரு கப் கெல்லாக்ஸ் இல்லாட்டி முளை கட்டுன பச்சைப்பயிர். இத்தோட உங்களுக்கு விருப்பமான ஏதாவது பழங்களை சேத்துக்கலாம். முடிஞ்சவரைக்கும் இதுலேயும் பாலையும், சர்க்கரையையும் அவாய்டு பண்ணிருங்க.

ஆபிஸ் போறவரா இருந்தாலும் சரி… இல்லை வீட்லேயே இருக்கிறவரா இருந்தாலும் சரி… ஒரு நாளைக்கு உங்களோட ஸ்நாக்ஸ் டைம் இரண்டு வேளையாத்தான் இருக்கனும்.

காலையில பதினொன்னு டூ பதினொன்றரைக்குள்ள ஒரு தடவையும், சாயந்திரம் நாலு டூ ஆறு மணிக்குள்ள ஒரு தடவையும் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம், முடிஞ்சவரைக்கும் எண்ணெய் பலகாரங்களையும், பேக்கரி ஐயிட்டங்களையும் தவிர்த்துடுங்க. பழங்கள், பிஸ்கட்ஸ், வெஜிடபுள் சாலட், முளைகட்டுன பச்சைப்பயிர் போன்ற ஐயிட்டங்களை ஸ்நாக்ஸ் டைமுக்கு சாப்பிடறது ரொம்ப நல்லது.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்… இந்த ரெண்டு தடவையைத்தவிர உங்க உடம்புக்குள்ள வேறெப்பவும் எந்த ரூபத்துலேயும் ஸ்நாக்ஸ் உள்ள போகக்கூடாது.

ஒரு நாளைக்கு குறைஞ்சது எட்டு டம்ளருக்கு (3 முதல் 4லிட்டருக்கு) குறையாம தண்ணி குடிங்க. ஒவ்வொரு முறை தாகம் எடுக்கும்போதும் சும்மா ஒரு டம்ளர் தண்ணியில நாக்கை நனைக்காம, மினிமம் அரைலிட்டர் குடிங்க.

இதனால அடிக்கடி ஒன் பாத்ரூம் போகவேண்டியது வரும். குடிக்கிற தண்ணியில சோம்பு போட்டு நல்லா ஊறவச்சோ, இல்லை கொதிக்க வைச்சு ஆற வெச்சோ குடிக்கிறது உங்க தொப்பை குறையிற வேகத்தை இன்னும் அதிகப்படுத்தி தொப்பையை கட்டுக்குள்ள வைக்கிறதுக்கு ரொம்ப உதவுமுங்க…!.

மத்தியான சாப்பாடு நீங்க என்னவேணா ஃபுல் கட்டு கட்டிக்கோங்க… தப்பேயில்லை. ஆனா ராத்திரி சாப்பாடு நான் வெஜ் கூடவே கூடாதுராத்திரிக்கு ஒரு ஃபுரூட் ஜூஸோ, இல்லை ஏதாவது பழமோ, இல்லை ரெண்டு சப்பாத்தியோ, இல்லை வெஜிடபிள் சாலட்டோ சாப்பிடறது ரொம்ப நல்லது.

முடியாதவங்க அட்லீஸ்ட் என்ன சாப்பிட்டாலும் அரைவயிறு சாப்பிட்டுட்டு, சாப்பிட்ட உடனே படுக்காம ஒரு அரை மணி நேரம் கழிச்சி தூங்கப்போங்க. சாப்பாட்டுல வாரத்துக்கு ரெண்டு தடவையாவது சுரைக்காய், பப்பாளிக்காய், முட்டைகோஸ் போன்றவற்றை சேர்த்துக்கிறதும், டெய்லி ராத்திரி ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடறதும் தொப்பையை குறைக்க உதவும்னு சில சமையல் குறிப்புங்க சொல்லுதுங்க.

இது எல்லாத்தவிட முக்கியம் எப்பவுமே டயட்ன்ற பேர்ல பட்டினி கிடக்கக்கூடாது. அதேமாதிரி டைம் மாறி மாறி சாப்பிடாம தினமும் ஒரே நேரத்தில சாப்பிடனும்.

மேலே சொன்ன  ஐடியாவையும் தவறாம ரெகுலரா ஃபாலோ பண்ணனும். சும்மா ரெண்டு நாளோ, ரெண்டு வாரமோ பண்ணிட்டு ரிசல்ட்டு இல்லைன்னு விட்டுட்டீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பாளியில்லைங்க. குறைஞ்சது ஒரு ரெண்டு மாசமாவது இதை ஃபாலோ பண்ணினீங்கன்னா அப்புறமாத்தான் உங்க தொப்பையில ஏற்படுற மாற்றங்கள் உங்களுக்கு சந்தோஷத்த குடுக்கிற அளவுக்குத்தெரியும்.

மேலே சொன்ன ஐடியாவெல்லாம் இளந்தொப்பைக்கும், மீடியம் தொப்பைக்கும்தான் பொருந்தும்.

மாங்கு மாங்குன்னு எக்ஸர்சைஸ் பண்ண முடியாதவக… ஸ்ட்ரிக்ட் டயட்ல இருக்க முடியாதவக… இவுகளுக்காகத்தான் இந்த ஐடியாவெல்லாம்… ஆல் தி பெஸ்ட் …!!!

(Visited 36 times, 1 visits today)
About Haja

Software Engineer by profession, Author and the Founder of "bench3" you can connect with me on Twitter , Facebook and also on Google+

Speak Your Mind

*