Uterus Problems (Tamil)

கர்ப்பப்பை கோளாறுகள்:

இன்று கர்ப்பபை சம்பந்தமான பிரச்சினை மிக அதிகரித்து கர்ப்பப்பையில் புற்றுநோய்வரை ஏற்பட்டு பின் கர்ப்பபையையே எடுத்துவிடுகிறார்கள்.

அவ்வாறு எடுக்கப்பட்டாலும் அந்த பெண் தொந்தரவுகளில் இருந்து வெளிப்பட்டு நிம்மதியாக இருக்கிறாரா? இல்லை அதன் பின் மற்ற தொந்தரவுகளுக்கு ஆளாகிறாரா? என்றால் அவர் மேலும் மேலும் தொந்தரவுகளுக்கு ஆளாவதைத்தான் பார்க்க முடிகிறது.

Uterus

ஆம் தவறான செயலை செய்தால் தவறான விளைவுகள்தான் ஏற்படும்.கர்ப்பப்பையில் என்ன மாதிரியான தொந்தரவுகள் ஏற்படும்

1. ஒழுங்கற்ற மாதவிடாய்
2. அதிக இரத்தப் போக்கு
3. அதிகநாட்கள் இரத்தப் போக்கு
4. அதிக வலி
5. வெள்ளைப்படுதல்
6. புண்கள்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இதற்கு காரணம் என்ன? இதை ஏதாவது ஒரு ஆங்கில மருத்துவரிடம் சென்று கேட்டால் அவர்கள், அவர்கள் பங்கிற்கு ஏதேனும் சொல்வார்கள்.

ஆங்கில மருத்துவத்திற்கு மூலகாரணம், தெரியாத அதே சமயம் குணப்படுத்த முடியாத நோய்களின் பட்டியலில் 15 ஆவது வரிசையில் இருப்பது “கர்ப்பப்பை சம்மந்தமான அனைத்து நோய்களும்”.

எனவே மூலகாரணமும் தெரியாமல், குணப்படுத்தவும் இயலாத ஒரு மருத்துவத்தை நாம் நாடும்போது அந்த நோய் முற்றுவது என்பது இயற்கையே. தவறான செயலை செய்தால் தீங்கு நிச்சயம் நேரும் என்பது உண்மைதானே. அதுதான் இங்கும்.

சரி இதற்கான வழியை பற்றி இங்கு கொஞ்சம் பார்போம்.

நமது முன்னோர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டபோது அது எத்தனை நாட்களில் குணமடைந்தது?

தற்போதைய பெண்களுக்கு எத்தனை நாட்களில் குணமடைகிறது?

முன்னோர்களென்றால் நமது பாட்டியையே எடுத்துக்கொள்ளலாம்.

அவர்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்பட்டதா என்றால் பெரும்பாலும் ஏற்பட்டு இருக்காது. ஆனால் தற்போதைய பெண்களுக்கு ஏன் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுகிறது?

முதலில் மாதவிடாயை சுருக்கமாகப் பார்க்கலாம்.

மாதவிடாய் என்பது ஒரு பெண் பருவம் அடைந்த நாள் முதல் எற்படும் ஒரு இயற்கையின் சுழற்சி. அந்த பெண்ணின் சினைப்பையில் இருக்கும் கருமுட்டை ஆனது கருக்குழாய்மூலம் கருப்பையை அடைந்து ஆணின் உயிரணுவிற்காக காத்திருக்கும்.

இந்த கருமுட்டையை தாங்கிப் பிடிக்க இரத்தத்தினால் ஆன ஒரு பை உருவாகி அதில் இந்த கருமுட்டையானது இருக்கும். ஆணின் உயிரணு கிடைக்காத பட்சத்தில் அந்தக் கருமுட்டை மற்றும் இரத்தத்தால் ஆன பை இரண்டும் உடைந்து உடலைவிட்டு வெளியேறிவிடும்.

இது இயற்கையாக நடக்கும் ஒரு செயல். இந்த செயல் 28 நாட்களில் நடந்து முடிந்து அடுத்த சுழற்சி ஏற்படும். இது இயற்கை. அதேபோல் இந்த வெளியேறும் செயல் மட்டும் மூன்று நாட்கள் நடக்கும்.

ஆனால் இன்றைய கால பெண்களுக்கு அவ்வாறு நடக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். மூன்று நாட்களில் வெளியேற வேண்டிய இந்த கழிவு 5/6 நாட்கள் வரை தொடர்ந்து வெளியேறுதல்,குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே வெளியேறுதல்,

குறிப்பிட்ட நாட்கள் கழித்தும் வெளியேறாமல் இருத்தல், அதிக வலி, அதிக உதிரப்போக்கு, சில சமயங்களில் ஒரு நாள் மட்டும் வெளியேறுதல், தொடர்ந்து பல நாட்கள் உதிரப்போக்கு இருத்தல், தொடர்ந்து சில மாதங்கள் கழிவு வெளியேறாமல் இருந்தல் போன்றவை ஏற்படுகிறது.

நம் பாட்டி ,அம்மாக்களுக்கு இல்லாத இந்த சிக்கல் ஏன் நமதுகால பெண்களுக்கு? காரணம் நமக்கு உடலைப் பற்றிய தெளிவு இல்லாமல் போனது ஒருபுறம், நமது வாழ்க்கை முறை ஒருபுறம். இங்கே இந்த பிரச்சினைகள் இல்லாமல் வாழ்ந்த நமது முன்னோர்கள் வாழ்ந்தது எப்படி? மிக எளிது.

Uterus 1

1.அந்தக் காலங்களில் மாதவிடாய் சமயத்தில் அவர்கள் குளிக்கமாட்டார்கள்.

2.எந்த வேலையும் செய்யாமல் தீட்டு என்று வீட்டிற்கு ஒதுக்குபுறம் ஒதுக்கிவிடுவார்கள்.

3.எந்த வித நாப்கினும் அவர்கள் பயன்படுத்தவில்லை. பருத்தி துணிகளையே பயன்படுத்தினார்கள்.

இந்த செயல்களில் மறைந்திருக்கும் சூட்சும விஞ்ஞானம் என்ன தெரியுமா?

1. நாம் முன்னமே பார்த்த அந்தக் கழிவானது வெளியேற உடலின் சூடு மிகவும் துணைபுரிகிறது. அதனால் அவர்கள் குளிப்பதைத் தவிர்த்தார்கள். அதன் விளைவு உடலின் சூடு குறையாமல் கழிவை வெளியேற்ற அந்த சூடு பயன்பட்டது.

ஆனால் இப்போது பெண்கள் அவர்கள் சூழ்நிலை காரணமாக தினமும் வழக்கம் போல் குளித்துவிட்டு வருவதால் உடல் சூடு குறைவதால் கழிவு வெளியேற்றம் தடைபடுகிறது.

2.அந்த காலங்களில் தீட்டு என்று ஓரமாக அமர்ந்து ஓய்வில் இருந்தார்கள். அதனால் உடலில் எந்த வேலையும் செய்யாமல் இருந்ததால் வேலை செய்யும்போது ஏற்படும் சக்தி பரிமாற்றம் ஏற்படாமல் முழு இயக்க சக்தியும் கழிவு வெளியேற்றத்திற்கே செலவு செய்யப்பட்டதால் எளிதில் கழிவு வெளியேறியது.

மற்றபடி அதில் தீட்டு என்றும், தீண்டத்தகாதவர் என்றும் ஏதும் இல்லை. இந்த இரண்டு செயல்களும் நம் முன்னோர்கள் இதற்கு கொடுத்த முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

ஆனால் இன்றைய பெண்கள் சூழ்நிலையின் காரணமாக உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் வேலை செய்வது அவர்கள் உடலில் உள்ள மாதவிடாய் கழிவை வெளியேற்றவிடாமல் தடுக்கிறது.

3.அந்தக்காலங்களில் நமது அம்மா, பாட்டி போன்றோர்கள் இன்றைய பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் பயன்படுத்தியது இல்லை. எனவே அவர்களுக்கு கர்ப்பப்பை தொடர்புடைய சிக்கல்கள் இருந்தது இல்லை.

இதை சொல்லும்போது நாப்கின் பயன்படுத்துவது தவறா என்று கேட்கலாம். இன்றைய விளம்பரங்களில் பாருங்கள், நாப்கின் அணிந்துகொண்டு மலை ஏறலாம், மரம் ஏறலாம், ஓடலாம், ஆடலாம், பாடலாம் என்று சொல்லப்படுகிறது.

இது சரியா என்று மேலே சொல்லப்பட்ட கருத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஓய்வில் இருந்தால்தான் கழிவுகள் வெளியேறும். ஓய்வு இல்லாமல் மலையும், மரமும் ஏறினால் என்ன நடக்கும். கழிவுகள் உடலிலேயே தங்கும். மேலும் நாப்கின்களில் இருக்கும் திரவத்தை உறிஞ்சும் ஜெல், மாதவிடாய் கழிவுகளை வெளியேற்ற விடாமல் தடுக்கிறது. அதனால் கழிவுகள் முழுதும் வெளியேறாமல் உடலிலேயே தங்குகிறது.

4. இதுபோன்று தங்கிய கழிவுகளாலேயே கர்ப்பப்பையில் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட சிக்கல்கள் ஏற்படுகிறது.

இதுபோக இந்த சிக்கல்கள் சரியாக வேண்டி எடுத்துக்கொள்ளும் மருந்துகள், மாத்திரைகள், அதுவும் பெண்கள் நல மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளும் நோயை பெரிதுபடுத்தி கர்ப்பப்பையில் அதிக சிக்கல்களை ஏற்படுத்தும்.

உடனே கேள்வி எழும்… என்ன மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகள் கூட சிக்கல்களை பெரிதுபடுத்துமா? ஆம். ஆங்கில மருத்துவத்திற்கு மூலகாரணம் தெரியாது, அதேசமயம் குணப்படுத்தவும் முடியாது என்று உலக சுகாதர நிறுவனமும், இந்திய அரசாங்கமும் அறிவித்திருக்கும் பட்டியலில் 15 ஆவது இடத்தில் “கர்ப்பப்பை தொடர்புடைய அனைத்து நோய்களும்” என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த காரணத்தாலேயே ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் சாப்பிடுவது கர்ப்பப்பையை எடுக்கும் நிலைக்குக் கொண்டுசெல்கிறது. சரி இந்த சிக்கல்கள் வராமல் இருக்கவும், வந்தவர்கள் இதை சரி செய்யவும் என்ன செய்யவேண்டும்.

எப்போதும் போல் பசி எடுக்கும்போது பிடித்த உணவுகளையும், தாகத்திற்கு தண்ணீரையும், உடல் ஓய்வு கேட்கும்போது ஓய்வையும், தூக்கம் வரும்போது தூக்கத்தையும் உடலுக்கு கொடுத்தாலே போதும்.

மேலும் மாதவிடாய் காலங்களில் முதல் மூன்று நாட்கள் குளிக்காமல் இருந்து உடல் சூடு குறையாமல் பார்த்துக்கொண்டு, அந்த சமயங்களில் நாப்கின் பயன்படுத்தாமல் ஓய்வில் இருந்தால் போதுமானது. இந்த காலத்தில் ஓய்வா என்றால், நிச்சயம் ஓய்வுதான் தேவை.

மேலும் சொல்வதானால் பெண்கள் வயிற்றை ஸ்கேன் செய்து பார்ப்பதாலும், கர்ப்பகாலங்களில் குழந்தையை ஸ்கேன்செய்ய கருப்பையை ஸ்கேன் செய்வது, சிசேரியன் என்ற பெயரில் கர்ப்பப்பையை கிழித்து குழந்தையை வெளியே எடுப்பதும் கூட கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு காரணமாக அமைகிறது. அதைப்பற்றி அடுத்து எழுதலாம்.

இதை செய்துவந்தாலே மெல்ல மாதவிடாய் சிக்கல்கள் தீரும்.

Incoming Search Terms:

(Visited 2,354 times, 1 visits today)
About Haja

Software Engineer by profession, Author and the Founder of "bench3" you can connect with me on Twitter , Facebook and also on Google+

Speak Your Mind

*