Useful Healthy Tips

பயனுள்ள ஆரோக்கிய குறிப்புகள்:

வேப்பிலைக் கொழுந்தை அரைத்துத் தயிருடன் கலந்து சாப்பிட்டால் பருத்தொல்லை நீங்கும்.

காலையில் சத்துள்ள உணவும் இரவில் அரை வயிறு உணவும் சாப்பிட்டு வந்தால் ஆயுள் அதிகரிக்கும்.

வாழை இலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதுமை, தலை நரைத்தல், தள்ளாமை ஆகியவை காலம் தாழ்த்தி வரும்.

வெங்காயத்தை தினமும் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள கிருமிகள் அழிந்துவிடும்.

Healthy Tips

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் சிறிதளவு வினிகர் கலந்து குளித்தால் தலைமுடி மிருதுவாகும்.

காய்ச்சல் குணமாக மிளகைப் பொடி செய்து கஷாயமாகக் குடித்துவரலாம்.

புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் பல் துலக்கும்போது அந்தப் பொடியுடன் உப்பு சேர்த்துத் துலக்கினால் பல் நோய்கள் வராது.

About Haja

Software Engineer by profession, Author and the Founder of "bench3" you can connect with me on Twitter , Facebook and also on Google+

Speak Your Mind

*