காமவெறியரின் புது ஆயுதம்.

முடிந்தவரை அத்தனை பெண்களுக்கும் தெரியப்படுத்துங்கள்,*******என்ற எளிதில் கரையும் சுவையற்ற மருந்து ஒரு பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டால்,சிறிதுநேரத்தில் மதிவெறி(போதை) ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்துவிடுவார்களாம்;

இரண்டொரு மணிநேரத்தில் தன்னிலை மறந்து பத்து பனிரெண்டு மணிநேரத்திற்கு மயக்கத்தில் இருக்க நேரிடுமாம்; பாலியல் வல்லுறவு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டுபிடிக்க முடியாதாம்;

அதைவிட கொடுமை அந்த பெண் எப்போதுமே கருவுறமுடியாமல் போய்விடுமாம்; தொடர்ந்து கொடுக்கப்பட்டால் இதற்கு அடிமை ஆகநேரிடுமாம்; மேலும் பல பக்கவிளைவுகள் உண்டு என்கின்றனர்;

இதேபோல நிறைய வல்லுறவுக்கு வழிவகுக்கும் மருந்துகள் இருக்கின்றன; அவற்றில் இந்த ரோஹைப்னால் எளிதில் கிடைக்கக்கூடியது;
எனவே, பெண்களே, நீங்கள் இரவுநேரக் கொண்டாட்டங்களுக்குச் செல்லாதவர்களாக இருந்தாலும் எப்போதாவது தனியாக ஒரு இடத்திற்குச் செல்லநேரலாம்;

அல்லது வேறு எதோ ஒரு சூழ்நிலையில் உங்களுக்கு நம்பிக்கையானவர் மூலம் வேறுயாராவது கொடுத்துவிடலாம், மூடிய புட்டிகளிலும் ஊசியால் செலுத்தப்பட்டிருக்கலாம்; சுவையும் இருக்காது;

எனவே வெளியிடங்களில் எச்சரிக்கையாக இருங்கள். பெண்களே உஷார்!ரோஹைப்னால்- காமவெறியரின் புது ஆயுதம்!