1) டீச்சர்: டாய். நான் இங்க நாய் மாதிரி கத்திட்டு இருக்கேன், கடைசி பென்ச்ல உக்காந்து இருந்த மனோ எங்கடா காணோம்?
மாணவன்: உங்களுக்கு தான் பொறை பிஸ்கட் வாங்க போயிருக்கான் டீச்சர். டீச்சர்: ????????????

2) அப்பா அழுது கொண்டிருக்கும் மகனிடம் கேட்கிறார்..
அப்பா: ஏன்டா அழுதுட்டு இருக்கே?மகன்: அம்மா அடிசிட்டாங்கப்பா…
அப்பா: அதுக்கு போய்யா அழுவற…
மகன்: போய்யா, உன்னை மாதிரிலாம் என்னால வலி தாங்க முடியாது..
அப்பா: ????????????

Relax Please

3) பள்ளிகூடத்துல வாத்தியாரும் குறும்புக்கார மாணவனும்…

வாத்தியார்: ABCD எத்தனை எழுத்து..சொல்லு..
மாணவன்: 4
வாத்தியார்: Total?
மாணவன்: 5
வாத்தியார்: Stupid
மாணவன்: 6
வாத்தியார்: What
மாணவன்: 4
வாத்தியார்: Nonsense
மாணவன்: 8
வாத்தியார்: ஒத்துக்குறேன்..நீ புத்திசாலி தான்..ஒத்துகிறேன்..உக்காரு..
மாணவன்: அது..

4) பேஷண்ட்: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்…
டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ?
பேஷண்ட்: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்….
டாக்டர்: ??????

5) டாக்டர் : உடம்புக்கு அப்பப்ப வியாதிகள் வரத்தான் செய்யும் ..அதுக்கு பயந்துட்டு ஹாஸ்பிட்டல் வராம இருக்கறதா?
பேஷண்ட்: நான் பயப்படறது வியாதிக்கு இல்ல டாக்டர் உங்களுக்கு….
டாக்டர் : ?????

6) பேஷண்டின் மனைவி : டாக்டர் ….என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு…இதுக்கு என்ன பண்ணலாம் ?………..
டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்.
பேஷண்டின் மனைவி : ????

7) நண்பர் 1 : இன்னையில இருந்து ஒரு வாரம் என் பொண்டாட்டிக்கு பயப்படரதில்லனு முடிவு பண்ணியிருக்கேன் ..
நண்பர் 2 :ஏன் ?
நண்பர் 1 : நேத்துதான் என் பொண்டாட்டி வூருக்கு போய்ட்டா அதான்
நண்பர் 2 : ?????

8) கணவன் : உன்னோட சமையல் டாப் டக்கரா இருக்கு ..
மனைவி : என்னதான் ஐஸ் வெச்சாலும் நீங்கதான் சமைக்கணும் …
கணவன் : ??????

9) நண்பர் 1 : உங்க மனைவி கெணத்துல விழுந்து தத்தளிக்கும் போது கூட நீங்க ஏன் காப்பாத்தல ?
நண்பர் 2 : நீங்க உணர்ச்சி வசப் படக்கூடதுனு டாக்டர் சொல்லியிருக்கார் ..
நண்பர் 1 : ?????