Refined Oil – Slow Poison

மெல்லக்கொல்லும் நஞ்சு( slow poison ) ரீபைண்ட் ஆயில்

மெல்லக்கொல்லும் நஞ்சு( slow poison ) ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க! நோயை விலை கொடுத்து வாங்காதிங்க. நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாத எண்ணெய்.

ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?

மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள். பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள். இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.

திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் ” சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் ” என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.

சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது. எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான் நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக பெரிய தொகைகளை செலவளித்து கொண்டு இருக்கிறார்கள்.

நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பது தான் காரணம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.

இதற்க்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது ரீஃபைண்ட் ஆயில். யோசிச்சு பாருங்க இவ்வளவு தீமையான ஒரு பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி, நம் ஆரோகியத்தை நாமே விலை கொடுத்து பாழ்படுத்தி கொள்கிறோம்.

ரீபைண்ட் செய்யாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கி பயன் படுத்தலாம்.

ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா : அய்யய்யோ அதுல நிறைய கொழுப்பு இருக்குனு சொல்லு வாங்களே! அது மட்டும் இல்லாம கொழுப்பு உள்ள எண்ணெய் பயன் படுத்தினா ஹார்ட் அட்டேக், B.P. வரும்,ரொம்ப வெய்ட் போடும்னு சொல்லு வாங்களே! நான் : சரிங்க ரீபைண்ட் ஆயில் தானே இப்போ பெரும்பாலும் பயன்படுத்துறோம்.

யோசிச்சு பாருங்க உங்க ஊர்ல ஹார்ட் வர்றவங்களோட எண்ணிக்கை குறைஞ்சு இருக்கா இல்ல கூடி இருக்கா. என்ன கொடுமைனா முன்னயாவது 60, 70 வயசு ஆனவங்களுக்கு பெரும்பாலும் ஹார்ட் அட்டாக் வந்தது. இப்போ தெல்லாம் 25,30,35 வயசு உள்ளவங்களுக்கே ஹார்ட் அட்டக் வருது.

அப்போ ரீபைண்ட் ஆயில் உபயோகிச்ச பிறகு நோயின் அளவு ஜாஸ்தி தானே ஆகியிருக்கு?.. ஒரு வேலை நீங்க இப்படி கேட்டா : சரி ரைட்டு வேற எண்ணெய் வாங்கலாம்னா அதாவது,எள் எண்ணெய் (நல்லெண்ணெய்), கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கலாம்னு பார்த்தா விலை பட்ஜெட்ல அடங்காது போல இருக்கே!.

நான்: ஒரு லிட்டர் கடலை எண்ணெய் 170 ரூபாய், ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் 85 ரூபாய், அப்போ ரீபைண்ட் ஆயில் வாங்குனா உங்களுக்கு பாதி பணம் அதாவது 85 ருபாய் மிச்சம். அந்த பணத்தை சேர்த்து வச்சு என்னா செய்விங்க? நான் சொல்லட்டுமா!!! இப்படி மிச்சம் பிடிச்ச பணத்தை பேங்குல போட்டு வச்சு வட்டியும் முதலுமா டாக்டர் கிட்ட குடுபிங்க..

ஆரோகியத்திர்க்கு கேடு விளைவிக்கும் பொருளை குறைந்த விலையில் கிடைக்குதேன்னு வாங்கி உபயோக படுத்திட்டு பின்னால் நோய் வந்த பிறகு மிச்சம் பிடிச்ச பணத்தை டாக்டர் கிட்ட குடுத்துட்டு, உங்களையும் கஷ்ட படித்திக்கிட்டு இருக்கறதுக்கு, நல்ல தரமான பொருளை வாங்கி பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாமே!!! ஆரோக்கியம் தானே மிக பெரிய செல்வம்..

எண்ணெய் விலையை நாம் நினைத்தால் குறைக்கலாம். அது எப்படி ? நாம் எந்த பொருளை விரும்புகிறோமோ அதை வியாபாரிகள் தயாரித்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள். எதை அதிகமாக வாங்குகிறோமோ அதன் தயாரிப்பும் அதிகரிக்கும். தயாரிப்பு அதிகரித்தால் விலை குறையும்.

தரமான பொருளை அதிகாமாக வாங்கினால் அதன் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் தரமான பொருளை நியாயமான விலையில் வாங்க முடியும். மட்டமான பொருளை விற்கிறார்களே என்று வியாபாரிகளை குறை சொல்லி பயனில்லை. நாம் எதை கேட்கிறோமோ,எதை அதிகம் வாங்குகிறோமோ அதை தானே அவர்கள் விற்ப்பார்கள்.

நீங்கள் விஷம் குடுங்கள் என்று கேட்டால் விஷம் தான் கொடுப்பார்கள்!. அதை விடுத்து அய்யய்யோ விஷத்தை ஏன் வாங்குகிறீர்கள் அதை சாப்பிட்டால் இறந்து விடுவீர்கள் என்று விளக்கம் சொல்லி கொண்டு இருக்க மாட்டார்கள். விஷம் சாபிட்டால் இறந்து விடுவீர்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு.

About Haja

Software Engineer by profession, Author and the Founder of "bench3" you can connect with me on Twitter , Facebook and also on Google+

Comments

  1. Some are convinced that sub-vocalization could be of 2 levels,either ones is obviously responsible for hindering the operation of increasing speed levels.It’s not only a coincidence my daughter loves to read nowwants to make her own books. As the child develops more speaking skills, the questionscan become more complex based on their amount ofability.

  2. I never knew pants came in so many different colors!

  3. I just want to say I am just very new to blogging and truly liked you’re blog site. Most likely I’m planning to bookmark your site . You certainly have very good articles and reviews. Regards for revealing your website page.

  4. Thank you for this impressive report. I am refreshed following reading this. Thank you!

  5. My wife and i felt really ecstatic Raymond managed to round up his survey using the precious recommendations he received in your web pages. It is now and again perplexing to just find yourself giving out guidance which the others might have been selling. Therefore we figure out we have the blog owner to thank because of that. Those explanations you’ve made, the simple site navigation, the relationships your site assist to foster – it is most awesome, and it’s facilitating our son and our family reckon that the theme is excellent, which is certainly exceedingly indispensable. Many thanks for the whole lot!

  6. Wow, fantastic blog layout! How long have you been blogging for? you make blogging look easy. The overall look of your web site is magnificent, let alone the content!

  7. fantastic issues altogether, you simply received a new reader. What might you suggest about your publish that you simply made some days ago? Any sure?

Speak Your Mind

*