முட்டைப்பூச்சி தொல்லையில் இருந்து விடுபட சில டிப்ஸ்:

வீட்டில் மூட்டைப்பூச்சி இருந்தால், அதனை வெளியேற்றுவது என்பது அவ்வளவு சுலபமல்ல.எப்போது உங்கள் வீட்டில் மூட்டைப்பூச்சி உள்ளதோ, அப்போது முதலில் செய்ய வேண்டியது வீட்டில் உள்ள அனைத்து துணிகளையும் பேக்கிங் சோடா அல்லது வினிகர் பயன்படுத்தி துவைத்து, சுத்தமான இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும்.

Bedbugs

அதுமட்டுமின்றி, மூட்டைப்பூச்சியானது படுக்கும் பெட், மரத்தாலான நாற்காலிகள் போன்றவற்றில் தான் குடி கொண்டிருக்கும்.அப்படி அவ்விடத்தில் மூட்டைப்பூச்சிகள் இருக்கும் போது, அதனை நசுக்கி கொன்றுவிட்டால், அதன் இரத்த நாற்றத்திலேயே பல்வேறு மூட்டைப்பூச்சிகள் வர ஆரம்பிக்கும்.

எனவே மூட்டைப்பூச்சிகள் இருந்தால், அதனை நசுக்காமல்,ஒருசில பொருட்களைக் கொண்டு கொன்றுவிட்டால், அவை அழிந்துவிடுவதோடு, அவற்றை வீட்டில் இருந்து முற்றிலும் வெளியேற்றிவிடலாம்.

வினிகர்:

வினிகர்

மூட்டைப்பூச்சி உள்ள இடத்தில் வினிகரை தெளித்தால், அதில் உள்ள அமிலத்தன்மையாலும், அதன் வாசனையிலும் மூட்டைப்பூச்சியானது அழிந்துவிடும்.

உப்பு:

கல் உப்பை

உப்பு மற்றொரு சிறப்பான பூச்சிக்கொல்லி பொருள். அதற்கு மூட்டைப்பூச்சி அதிகம் உள்ள இடத்தில் அதன் மேல் கல் உப்பை தூவினால், மூட்டைப்பூச்சிகள் இறந்துவிடும்.

வெங்காயச் சாறு:

onion juice

நிறைய பேருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையிலேயே வெங்காயச் சாற்றினை மூட்டைப்பூச்சி உள்ள இடத்தில் தெளித்துவிட்டால், அதன் வாசனையில் மூட்டைப்பூச்சிகள் இறந்துவிடும்.

டீ-ட்ரீ ஆயில்:

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயிலை மூட்டைப்பூச்சி வாழும் இடத்தில் தெளித்தால், அதன் அடர்ந்த வாசனையினால் மூட்டைப்பூச்சிகள் இறந்துவிடுவதோடு, இனிமேல் மூட்டைப்பூச்சி வருவதையும் தடுக்கலாம்.

லாவெண்டர்..எண்ணெய்:

லாவெண்டர்..எண்ணெய்

லாவெண்டர் எண்ணெயும் மூட்டைப்பூச்சியை அழிக்க உதவும் பொருட்களில் ஒன்று. எனவே இதனையும் பயன்படுத்திப் பாருங்கள்..