முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையை தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று இங்கே  பார்ப்போம்.இயற்கைப் பொருட்கள் தான் எப்போதும் சிறந்தது என்று அனைவருக்குமே தெரியும். அதுமட்டுமின்றி, அத்தகைய பொருட்களில் தான் அனைத்து சத்துக்களும் இருக்கின்றன. ஆகவே கூந்தல் உதிராமல் இருக்க வேண்டுமென்று நினைத்தால், செயற்கை முறையை கடைபிடிப்பதை தவிர்த்து, இயற்கை வழிகளைப் பின்பற்ற வேண்டும். இப்போது அந்த இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

Hair Fall Remedy

முடி உதிர்வதை தடுக்கும் வழிகள்:

எண்ணெய்,தேங்காய் எண்ணெய், இரண்டையும் லேசாக சூடுபடுத்தி தலையில் பூசி, விரல் நுணியால் தலை முழுவதும்  முப்பது நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

தலையில் எண்ணெயை தேய்க்கும்  போது அதன் மயிற்கால்களில் படும்படி பூசினால் மட்டும் போதும். அழுத்தி தேய்க்ககூடாது.பின்பு ஒரு கணமான துண்டை சுடு நீரில் முக்கி பிழிந்து தலையில் இறுக்கமாக சுற்றி அரைமணி நேரம் கழித்து தலை குளிக்கவேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து வாரம் ஒரு முறை செய்து வந்தால் முடிகொட்டுவது நின்று விடும். சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும்.

இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும்:

* கூந்தல் உதிரும் பிரச்சனை உடைய பெண்கள், சிறிதளவு வெந்தயத்தை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்து வந்தால், கூந்தல் உதிர்வது படிபடியாக குறைத்து விடும்.

* ஆலிவ் ஆயில்  முறையாக பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், அது கூந்தலை வலுப்படுத்துவதுடன், கூந்தல் உதிர்வது  மற்றும் முடி நரைத்தல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். இது பொடுகை நீக்கும் இயற்கையான முறையாகவும் அமைகிறது.ஆலிவ் ஆயிலுடன் சம அளவு பாதாம் எண்ணெய்யை கலந்தும் பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லை நீக்கும்.

* புதிதாக காய்ச்சப்பட்ட பசும்பாலால் தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும். பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர, நாளடைவில் கூந்தல் உதிர்தல் குறைந்து விடும்.

* தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்து வந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்து அதை தண்ணீரில் கலந்து, மிதமாக சூடுபடுத்தி தலையில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்த பின், குளிக்க வேண்டும்.

முடி உதிர்வதைத் தடுக்க ஒரு எளிய வழி!

மதிய வாக்கில், கொத்து வேப்பிலையை பறித்து, சுத்தம் செய்து, இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு,தட்டு போட்டு மூடி கொதிக்க வைக்க வேண்டும்.

மூடியை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது.பின் அதை அப்படியே இறக்கி வைக்க வேண்டும்.

மறுநாள் காலையில் வேப்பிலைகளை எடுத்து விட்டு,அந்தத் தண்ணீரில் கூந்தலை அலச வேண்டும்.

வாரம் ஒரு முறை இப்படி செய்தாலே போதும்.அவ்வளவுதான், முடி உதிர்வது போயே போச்சு!