Stomach ulcers are painful sores that can be found in the stomach lining or small intestine. Stomach ulcers are also known as peptic ulcers. They occur when the thick layer of mucus that protects your stomach from digestive juices is reduced.

இன்றைய பரப்பான வாழ்க்கைச் சூழலில் அல்சர் ஒரு அன்றாட பிரச்சனையாக மாறிவிட்டது. ஜீரணமண்டலத்தில் அல்சர் எனும் புண்களை அவை எந்த இடத்தில் உண்டாகின்றன என்பதைப் பொறுத்து வாய்ப்புண் ,உணவுக்குழாய்ப் புண், வயிற்றுப்புண், சிறுகுடலின் முன்பகுதிப் புண் என்று பிரிக்கலாம்.

Easy Remedy for Stomach Ulcer (Tamil)1

வாயிலும் உணவுக்குழாய்களில் ஏற்படும் அல்சருக்கு முக்கியக் காரணம் வயிற்றிலிருந்து உணவுக்குழாய்க்கும் வாய்க்கும் அமிலம் ஏறிவிடுவதுதான். இரைப்பை வயிறு க்கும் உணவுக்குழாய்க்கும் நடுவே ஒரு வழி வால்வு உள்ளது. இது வயிற்றிலிருந்து எதுவும் மேலேறா வண்ணம் பார்த்துக் கொள்கிறது. பலருக்கு இந்த வால்வு சரியாக செயல்படாது. இதனால் ஜீரணச் சாறு மேலேறிவிடுகிறது. இதைத் தான் எதுக்கலிக்கிறது என்கிறோம்.

வாயில் பித்த நீர் கரிப்பது போன்ற புளிப்புணர்ச்சி தோன்றும். ஒரு வழி வால்வு தளர்ந்து போனால். இந்த மேலேறும் அமிலப் பிரச்சனை  வால்வு கெட்டியாகிவிட்டால் மூடிக்கொண்டே இருக்கும். இதைத் திறப்பது கடினமாகிவிட்டால் உணவுக் குழாயிலிருந்த உணவு வயிற்றுக்குள் செல்லாது. உணவுக்குழாயின் சுவர்கள் வயிறு  குடல் போன்றவற்றின் சுவர்கள் போல அமிலத்தைத் தாங்கும் சக்தியுடையவை புண்ணாகிவிடுகின்றன. குறிப்பாக உணவுக் குழாயின் கீழ்ப் பாகத்தில் இவ்வாறான பாதிப்பு அதிகம் ஏற்படும். அமிலம் இன்னம் மேலேறி வாய்ப்புண்களை உண்டாக்கி குரல் இழப்பு மாறுதல் ஏற்படலாம். ஏன் அமிலம் மூச்சுக் குழாயைக் கூட தாக்கி நுரையிரலில் தொற்று நோயை உண்டாக்கலாம்.

அல்சரை தவிர்க்க:

  • ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.

அல்சர் சிகிச்சை:

  • குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்றெரிச்சலைப் போக்கும்.
  • உங்கள் உணவில் நெய் சேர்த்துக் கொள்ளவும் நோயாளிக்கு நெய் ஜீரணமாகா விட்டால் வெந்நீருடன் சேர்த்துக் கொடுக்கவும். இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் கொடுத்தால் நல்லது. மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் சிறந்தது.

Easy Remedy for Stomach Ulcer (Tamil)

  • நெல்லிக்காய் சாறை சாக்கரையுடன் சேர்த்துக் குடிக்க பலனிளிக்கும்.
  • வில்வ இலைகள் பழங்கள் இவற்றைச் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்புண்கள் குணமாகும். 250 கிராம் முட்டைகோசை 500 மி.லி லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியளவு ஆனதும் அடுப்பிலிந்து இறக்கிக் குளிர வைக்கவும். இதை கேரட் சாறுடன் சேர்த்துப் பருகினால் அல்சர் குணமடையும்.
  • பாதாம் பால் தோலுரிக்கப்பட்ட பாதம்  பருப்புகளால் செய்வது அல்சருக்கு நல்லது.
  • உடைத்த அரிசியை ஒரு பாகத்திற்கு 14 பாகம் தண்ணீர் சேர்த்துக் கஞ்சி தயாரிக்கவும். இது அல்சருக்கு நல்லது. பருப்பு அரிசியுடன் தண்ணீர் சேர்த்து பொங்கல் போல் தயாரித்து உட்கொள்ளலாம்.
  • மாதுளம் பழச்சாறு  அல்சருக்கு நல்லது.